“எடப்பாடி பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்” - ஓபிஎஸ்

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம் என்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில்  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

“எடப்பாடி பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்” - ஓபிஎஸ்

சென்னை: "பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கும் காலமே அதிமுகவுக்கு பொற்காலம்" என்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பெய்த அதிகனமழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கும், பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.