‘தெறி’ ரீமேக் ‘பேபி ஜான்’ ட்ரெய்லர் எப்படி? - பாசப் போராட்டமும் அதிரடி ஆக்ஷனும்!
வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
மும்பை: வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடித்துள்ளார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வாமிகா நடித்துள்ளனர். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லீயின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவா நடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். தமன் இசையமைக்கிறார். இப்படம் வரும் டிச.25-ல் வெளியாகிறது.