“பாலாவிடமிருந்து அந்த அழைப்பு வரவில்லை என்றால்...” - ‘வணங்கான்’ விழாவில் நெகிழ்ந்த சூர்யா

“2000-ம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது” என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். 

“பாலாவிடமிருந்து அந்த அழைப்பு வரவில்லை என்றால்...” - ‘வணங்கான்’ விழாவில் நெகிழ்ந்த சூர்யா

சென்னை: “2000-ம் ஆண்டு இயக்குநர் பாலாவிடம் இருந்து எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால், இந்த வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்காது. ‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலா தான்” என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன், 25 ஆண்டுகளை கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைத்து ‘பாலா 25’ என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு சென்னை நந்தம்பாக்கம் வர்த்த மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.