அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ இந்தியில் மட்டும் ரூ.600 கோடி வசூல்!

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வசூல் கொண்ட 2வது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது ‘புஷ்பா 2’. 

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ இந்தியில் மட்டும் ரூ.600 கோடி வசூல்!

மும்பை: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வசூல் கொண்ட 2வது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாலிவுட்டில் வெளியான ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் இந்தியில் இந்த ஆண்டின் அதிகபட்ச வசூலை குவித்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்தப் படம் மொத்தமாக ரூ.870 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. இரண்டாவது இடத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலுடன் ‘பூல் புலையா 3’ படம் இடம்பெற்றது.