பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் Vs கலைஞர் கைவினைத் திட்டம்: அண்ணாமலை ‘மீம்’ விமர்சனம்
திமுக அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் மானியம் வழங்கும் நோக்கத்தை நீர்த்து போகச்செய்யும் என்று மீம் ஒன்றை வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை: திமுக அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் மானியம் வழங்கும் நோக்கத்தை நீர்த்து போகச்செய்யும் என்று மீம் ஒன்றை வெளியிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்தாமல் குழப்பம் ஏற்படுத்தியதால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் விஸ்வகர்மா திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி பெயரை மாற்றி வெளியிட்டுள்ளது திமுக. திமுக அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய திட்டம், திமுக தொண்டர்களுக்குப் பயனளிப்பதற்காக மட்டுமே சில தகுதித் தளர்வுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.