புதிய தலைமுறை ரசிகர்களை உருவாக்குகிறோம்: கர்னாடக இசை கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் பெருமிதம்
இருட்டை விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்பட்ட ஒரு செயலைத்தான் சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்களின் கூட்டமைப்பு முன்னெடுத்தது.
சென்னை: இருட்டை விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட, ஒரு மெழுகுவத்தியை ஏற்றிவைப்பது சிறந்த செயல் என்பர். அப்படிப்பட்ட ஒரு செயலைத்தான் சென்னை, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் கடந்த ஞாயிறன்று, உலக கர்னாடக இசைக் கலைஞர்களின் கூட்டமைப்பு முன்னெடுத்தது.
டிசம்பர் மாதத்தில் எண்ணற்ற சபாக்களால் நடத்தப்படும் ஆயிரக்கணக்கான மார்கழி இசை, நாட்டிய திருவிழாக்களின் சிறப்புக்காக இந்தியாவின் கலாச்சார தலைநகராக சென்னை மாநகரம் கொண்டாடப்பட்டாலும், சபாக்களில் ரசிகர்களின் கூட்டம் குறைந்துகொண்டே வருகிறது.