புதுச்சேரியில் மீண்டும் மழை: ஏரி, குளங்கள் நிரம்பியதால் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை தீவிரம்

புதுச்சேரியில் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில் உள்ளதால் தொடர் கண்காணிப்பு  மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் மீண்டும் மழை: ஏரி, குளங்கள் நிரம்பியதால் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் தொடர் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே அங்குள்ள ஏரி, குளங்கள் நிரம்பிய நிலையில் உள்ளதால் தொடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி தாக்கிய ஃபெஞ்சல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 48.4 செமீ மழை கொட்டியது. தமிழகத்தில் அணைகள் திறப்பால் புதுவை கிராமப்புறங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 500-க்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள், மின் மாற்றிகள் சாய்ந்தன. துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்தது.