புயலால் சேதமடைந்த சென்னை - திருச்சி சாலையை தமிழக அரசே சீரமைக்க விசிக வலியுறுத்தல்
ஃபெஞ்சல் புயலில் விழுப்புரம், கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசா யிகள், சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு 15 பேர் இதுவரை உயிரிழந்தி ருப்பது வேதனை அளிக்கிறது.
விழுப்புரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தை எதிர்பார்க்காமல் ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த சென்னை - திருச்சி சாலையை தமிழக அரசே விரைந்து சீரமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விசிக சட்டப் பேரவை குழுத் தலைவருமான சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக நேற்று அவர் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபெஞ்சல் புயலில் விழுப்புரம், கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசா யிகள், சிறு, குறு வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலுக்கு 15 பேர் இதுவரை உயிரிழந்தி ருப்பது வேதனை அளிக்கிறது.