போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் எப்போது? - மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல்
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்கள் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. அவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது. நிதிபற்றாக்குறையை காரணம் காட்டி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கப்படுவதில்லை.