போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி நிதி தேவைப்படும்

நிதி பற்றாக்​குறை உள்ளிட்ட காரணங்​களால் போக்கு​வரத்​துக் கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்​கப்​பட​வில்லை. 

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வுக்கு ரூ. 3028 கோடி நிதி தேவைப்படும்

சென்னை: போக்கு​வரத்து ஓய்வூ​தி​யர்​களுக்கு நிலுவை அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028 கோடி தேவைப்​படும் என போக்குவரத்​துத் துறை தெரி​வித்​துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறிய​தாவது: நிதி பற்றாக்​குறை உள்ளிட்ட காரணங்​களால் போக்கு​வரத்​துக் கழக ஓய்வூ​தி​யர்​களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்​கப்​பட​வில்லை.

இதுதொடர்பாக நீதி​மன்​றத்​தில் உள்ள பல்வேறு வழக்​கு​களில் அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தர​விடப்​பட்​டுள்​ளது. இதன் தொடர்ச்​சியாக அகவிலைப்படி உயர்வு வழங்க தேவையான தொகை குறித்து கணக்​கீடு செய்​யப்​பட்​டது. அதன்​படி, நடப்​பாண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்​தில் அகவிலைப்படி உயர்வு வழங்க ரூ.3,028.75 கோடி தேவைப்​படு​கிறது. மேலும், மாதந்​தோறும் அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்​டு​மானால் கூடு​தலாக ரூ.73.42 கோடி தேவைப்​படு​கிறது. இதனை வழங்​குவது குறித்து அரசு முடிவு செய்​யும். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.