போக்குவரத்து நெரிசலில் திணறும் ஜிஎஸ்டி சாலை: நிரந்தர தீர்வு என்ன?

தேசிய நெடுஞ்​சாலைத்​ துறை​யின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள இச்சாலை​யில் கடந்த 15 ஆண்டு​களில் வணிக நிறு​வனங்​களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலில் திணறும் ஜிஎஸ்டி சாலை: நிரந்தர தீர்வு என்ன?

சென்னை தி.நகருக்கு அடுத்​த​படியாக தென் சென்னை​யில் குரோம்​பேட்டை முதல் தாம்​பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலை, வணிக நிறு​வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்​சாலைத்​ துறை​யின் கட்டுப்​பாட்​டின் கீழ் உள்ள இச்சாலை​யில் கடந்த 15 ஆண்டு​களில் வணிக நிறு​வனங்​களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்பகுதி முழு​வதும் வணிக நிறு​வனங்கள் அதிகரித்​திருந்​தா​லும் பெரும்​பாலான கடைகளில் பார்க்​கிங் வசதி இல்லை.

இந்த வணிக நிறு​வனங்​களுக்கு கட்டிட அனுமதி கொடுக்​கும்​போதே, பார்க்​கிங் வசதி அமைக்​க​வும் அனுமதி வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், பார்க்​கிங் வசதிக்கு ஒதுக்​கப்பட வேண்டிய பகுதி​களில் வணிக நிறு​வனங்​களால் கடைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. இதனால் ஜிஎஸ்டி சாலை​யில் குரோம்​பேட்டை - பல்லா​வரம் வரையிலான 2 கி.மீ. தூரத்​தில் செயல்​படும் வணிக நிறு​வனங்​களுக்கு வரும் வாடிக்கை​யாளர்​கள், தங்களது வாகனங்களை சாலை​யிலேயே நிறுத்தி செல்​கின்​றனர்.