பிச்சாட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு: ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிச்சாட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு: ஆரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர்: பிச்சாட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் - நகரி அருகே உருவாகும் ஆரணி ஆற்றின் குறுக்கே ஆந்திர பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. திருவள்ளூர் மாவட்டம்- ஊத்துக்கோட்டையிலிருந்து, சுமார் 16 கி.மீ., தொலைவில் உள்ள இந்த அணை 1.85 டி.எம்.சி., கொள்ளளவுக் கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிச்சாட்டூர் அணைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 3,600 கன அடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. இதனால், நீர் இருப்பு 1.45 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.