“மகாபாரதத்தை படமாக்க ஆசை. ஆனால்…” - நடிகர் ஆமீர்கான் பகிர்வு

 “மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.   அதில் தவறு நிகழ்ந்து விடுமோ என பயப்படுகிறேன். எனவே அதை சரியாக புரிந்துகொண்டு தவறில்லாமல் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப் படுத்த விரும்புகிறேன்” என நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார். 

“மகாபாரதத்தை படமாக்க ஆசை. ஆனால்…” - நடிகர் ஆமீர்கான் பகிர்வு

மும்பை: “மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதில் தவறு நிகழ்ந்து விடுமோ என பயப்படுகிறேன். எனவே, அதை சரியாக புரிந்துகொண்டு தவறில்லாமல் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப் படுத்த விரும்புகிறேன்” என நடிகர் ஆமீர்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “மகாபாரதத்தை திரைப்படமாக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது மிகப் பெரிய படைப்பு. அதில் தவறு நிகழ்ந்து விடுமோ என பயப்படுகிறேன். இது மிகப் பெரிய பொறுப்பு. ஏனென்றால், இந்தியர்களாகிய நமது ரத்தத்தில் கலந்திருக்கும் மிகவும் நெருக்கமான ஒரு படைப்பு. எனவே, அதை சரியாக புரிந்துகொண்டு தவறில்லாமல் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன்.