மாவட்டச் செயலாளரை மாத்துங்க..! - கையெழுத்து இயக்கம் நடத்திய திருச்சி அதிமுகவினர்

டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும் யார் மீதும் கைவைக்க முடியாத இக்கட்டில் இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி.

மாவட்டச் செயலாளரை மாத்துங்க..! - கையெழுத்து இயக்கம் நடத்திய திருச்சி அதிமுகவினர்

டெபாசிட்டை இழக்குமளவுக்கு அதிமுக-வின் செல்வாக்கு சரிந்த போதும் யார் மீதும் கைவைக்க முடியாத இக்கட்டில் இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி. அதனால் ஆங்காங்கே அதிமுக-வுக்குள் அடிதடிகள் அரங்கேறுகின்றன. அதன் உச்சமாக, மாவட்டச் செயலாளரை மாற்றக் கோரி திருச்சி மாநகரின் 35 வட்டச் செயலாளர்கள் கையெழுத்திட்டு பழனிசாமியிடமே மனு கொடுத்திருக்கிறார்கள்.

​திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பின்னால் சென்ற பிறகு அந்தப் பதவி அப்போதைய மாநகர் மாணவரணி செயலா​ளரும் இபிஎஸ் ஆதரவாள​ருமான ஆவின் கார்த்தி​கேயனுக்கே கைகூடும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்​பார்த்​தனர். ஆனால் அதற்கு மாறாக, தினகரன் பக்கம் போய்விட்டு திரும்பிய ஜெ.சீனி​வாசனை அந்தப் பதவியில் அமர்த்தினார் இபிஎஸ்.