மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,368 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,368 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 7,148 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,368 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.