பழனிசாமியை தூக்கத்திலிருந்து எழச் சொல்லுங்கள்: அமைச்சர் டிஆர்பி ராஜா
“2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கனவு காண்கிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
மதுரை: “2026-ல் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கனவு காண்கிறார். முதலில் அவரை தூக்கத்திலிருந்து எழுந்திருக்க சொல்லுங்கள்” என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
மதுரை ஐராவதநல்லூரில் இன்று (டிச.17) மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி, கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொறுப்பாளர் பிரபு வரவேற்றார்.