தமிழகமும், ஒரே நாடு ஒரே தேர்தலும்: அண்ணாமலையின் ‘உதாரண’ விளக்கம்
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை உதாரணமாக வைத்து இந்த தேர்தல் நடைமுறையை விளக்கினார்.
சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை ஜனநாயக முறைப்படி கொண்டுவரப்பட்டுள்ளது என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தை உதாரணமாக வைத்து இந்த தேர்தல் நடைமுறையை விளக்கினார்.
இது குறித்து சென்னை - தமிழக பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “1971-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கீட்டின்படி 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதன் பின்னர் அண்டை நாட்டில் இருந்து மக்கள் வந்தததால் சில பிரச்சினைகள் உருவான சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆண்டு காலம் அதிகரிக்க மாட்டோம் என அப்போதைய அரசு அறிவித்தது.