காமராஜர் பல்கலை. முக்கிய பதவிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க அரசு நடவடிக்கை
காமராஜர் பல்கலையில் முக்கிய பகுதிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான பேராசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மதுரை: காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய பகுதிகளுக்கு நிரந்தரமாக ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியான பேராசிரியர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்றி, நிர்வாகத்தை கவனிக்க, உயர்கல்வி ஆணையர் சுந்தரவல்லி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட ‘கன்வீனர்’ குழு நியமிக்கப்பட்டது. தற்போது, இக்குழுவில் இடம் பெற்றிருந்த 3 பேரில் ஒருவர் நீக்கப்பட்ட நிலையில், மற்றொருவருக்கு பதவி காலம் முடிந்தது. குழுத் தலைவர், ஒரு உறுப்பினர் மட்டுமே பணியில் உள்ளனர்.