விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

சென்னை: ‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று (டிச.6-) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், பங்கேற்காதது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: “‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல், புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று (டிச.6) சென்னையில் வெளியிடப்படுகிறது. 36 பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.