8-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்: ரூ.16 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை​யால் நாகை மாவட்ட விசைப்​படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்​பிடிக்க கடலுக்​குச் செல்​ல​வில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்​தகம் பாதிக்​கப்​பட்​டுள்ளதாக மீனவர்கள் தெரி​வித்​தனர்.

8-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்: ரூ.16 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

நாகப்பட்டினம்: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை​யால் நாகை மாவட்ட விசைப்​படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்​பிடிக்க கடலுக்​குச் செல்​ல​வில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்​தகம் பாதிக்​கப்​பட்​டுள்ளதாக மீனவர்கள் தெரி​வித்​தனர்.

வங்கக் கடலில் உருவாகி​யுள்ள குறைந்த காற்​றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி​யில் காற்றின் வேகம் அதிகரிக்​க​வும், கடலில் அதிக மழை பெய்​ய​வும் வாய்ப்புள்ள​தால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்​படகு​களில் கடலுக்​குச் செல்ல வேண்​டாம் என்று மீன்​வளத் துறை​யினர் கடந்த 11-ம் தேதி தடை விதித்​தனர்.