கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது.

கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை: சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

விதிகளை மீறியும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மீனவ சமுதாயம் மற்றும் பிற உள்ளூர் சமுதாயங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இவர்களை பாதுகாக்கவும், விதிமீறல்களை தடுக்கவும், புதிய திட்டங்களுக்கு உரிய அனுமதி வழங்கவும், கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை - 2019 தொடர்பான விதிகளை அறிந்து வைத்திருப்பது அவசியம்.