குறையாத ‘புஷ்பா 2’ வசூல் - ‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கல்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’. உலகளவில் ரூ.1,500 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது.

குறையாத ‘புஷ்பா 2’ வசூல் - ‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கல்

இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையாதது, ‘பேபி ஜான்’ படத்துக்கு சிக்கலாக அமைந்திருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2’. உலகளவில் ரூ.1,500 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்தியில் அதிக வசூல் செய்த ‘ஸ்ட்ரீ 2’ படத்தினை 15 நாட்களில் தாண்டி முதல் இடத்தினை பிடித்துள்ளது ‘புஷ்பா 2’.

இந்தியில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் குறையவில்லை. மல்டிப்ளக்ஸ் மற்றும் ஒற்றை திரையரங்குகள் என அனைத்திலுமே வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் இப்போதைய சூழலில் ‘புஷ்பா 2’ படத்தைத் தூக்க வாய்ப்பில்லை.