டீசல் இன்ஜின் ஆக மாற்றி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் சோதனை ஓட்டம்

நீலகிரி மலை ரயிலின் பர்னஸ் ஆயில் இன்ஜின், டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

டீசல் இன்ஜின் ஆக மாற்றி மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரயில் சோதனை ஓட்டம்

குன்னூர்: நீலகிரி மலை ரயிலின் பர்னஸ் ஆயில் இன்ஜின், டீசல் இன்ஜின் ஆக மாற்றப்பட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற மலை ரயில் இன்ஜின்கள் இதுவரை பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்தன. சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுவதை தவிர்க்க இந்த இன்ஜின்கள் டீசல் இன்ஜின்களாக மாற்றப்பட்டன.