“தி.மலை தென்பெண்ணை ஆற்றில் புதிய பாலம் இடிந்ததை மறைக்க எ.வ.வேலு முயற்சி” - இபிஎஸ்

திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்துவிட்டதை மறைக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும் தவறான தகவலை பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பரப்பி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

“தி.மலை தென்பெண்ணை ஆற்றில் புதிய பாலம் இடிந்ததை மறைக்க எ.வ.வேலு முயற்சி” - இபிஎஸ்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்துவிட்டதை மறைக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும் தவறான தகவலை பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பரப்பி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் இடையே தென்பெண்ணையாற்றில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (டிசம்பர் 6ம் தேதி) நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் கடந்த 2-ம் தேதி அதிகாலை விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் சென்றுள்ளது. அப்போது தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்க, நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் அடித்து செல்லப்பட்டது. பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றபோது, பாலத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டும், அதிக தூண்களை அமைக்க வேண்டும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.