திரைப் பார்வை: அந்த நாள் | ‘பஞ்சமி பங்களா’வின் ரத்த ரகசியம்!
இயக்குநர் தன் உதவியாளர்களிடம் விவரிக்கும் கதை, அந்த பங்களாவில் நடப்பதுபோன்ற கதையோட்டத்தில், எது இயக்குநர் விவரிக்கும் கதை, எது அங்கே நிஜமாகவே நடப்பது என்பதை மிகக் கூர்ந்து பார்த்தால் தவிர
நாயகன் ஆர்யன் ஷாம் ஒரு திரைப்பட இயக்குநர். அவர் இயக்கவிருக்கும் அமானுஷ்ய திகில் படத்தை அவருடைய அப்பாதான் தயாரிக்கிறார். தனது அந்தப் படத்தில் பணிபுரிய உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு, சென்னையின் கிழக்குக் கடற்கரைச்சாலை உள்ள ‘பஞ்சமி பங்களா’ என்கிற பழமையும் புதுமைமான தோற்றத்துடன் இருக்கும் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கி கதை விவாதத்தைத் தொடங்குகிறார். அதன்பிறகு அந்த பங்களாவில் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்கள்தான் கதை.
வீடுகளை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் திடுக்கிடும் திகில் (ஹம்ப் ஹாரர்) தருணங்கள் காரண காரியம் இல்லாமலும் ஒரு குறிப்பிட்ட நிமிட இடைவேளையில் வந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற பயமுறுத்தல்கள் மட்டுமே கொண்ட படங்கள் ஒரு கட்டத்தில் அலுப்பை உருவாக்கிவிடும். ஆனால், இந்தக் காட்சியில் இப்போது ‘ஜம்ப் ஹாரர்’ வந்து திடுக்கிட வைக்கப்போகிறது என்று பார்வையாளர், நிலைக் கண்ணாடியையோ, கதவிடுக்கின் மூலையையோ, அல்லது காற்றில் ஆடியபடி பாதி திறந்திருக்கும் பீரோவையோ பார்த்துப் பயந்துகொண்டிருக்கும் நேரத்தில், அந்த எதிர்பார்ப்புக்கு ‘பெப்பே’ காட்டிவிட்டு, முற்றிலும் வேறு மாதிரி பயமுறுத்தினால் அதைத் தரமான திகில் அனுபவம் எனலாம். ‘அந்த நாள்’ படத்தில் அத்தகைய புதிய ஹாரர் தருணங்களை முயன்றிருப்பதற்காகவே இயக்குநர் விவி கதிரேசனைப் பாராட்டலாம்.