நாகை, கடலூரில் இருந்து மாலத்தீவு, இலங்கைக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடக்கம்

நாகை, கடலூர் துறைமுகங்களில் இருந்து மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு விரைவில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது 150 பயணிகளுடன் வாரத்துக்கு 5 நாட்களுக்கு இருவழிகளிலும் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.