நாட்டுப்புறக் கலைஞர் டு அகோரி... கண்ணைக் கட்டி காசு பறித்த ‘கலை’ குடும்பம்!
தேனியைச் சேர்ந்த கலையரசனும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரகாவும் நாட்டுப்புறக் கலைஞர்கள். சோஷியல் மீடியா மூலம் பிரகாவுக்கு அறிமுகமான கலையரசன், அப்படியே அவரைக் காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார்.
தேனியைச் சேர்ந்த கலையரசனும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பிரகாவும் நாட்டுப்புறக் கலைஞர்கள். சோஷியல் மீடியா மூலம் பிரகாவுக்கு அறிமுகமான கலையரசன், அப்படியே அவரைக் காதலித்து 2019-ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவரும் கூட்டாக ஒரு யூ டியூப் சேனலைத் தொடங்கி அதில் நாட்டுப்புற கலைகள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், திடீரென ஒருநாள் செயற்கையாக ஜடை எல்லாம் பின்னிக் கொண்டு உடல் மொழியை மாற்றிக் கொண்ட கலையரசன், தன்னைத்தானே அகோரி என பிரகடனம் செய்து கொண்டார். அந்த அவதாரத்தை நம்பவைப்பதற்காக அவ்வப்போது காசி உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர ஆரம்பித்தார்.