புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் பேருந்து கட்டணம்
புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்கு பிறகு நடைமுறைக்கு வர உள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்கு பிறகு நடைமுறைக்கு வர உள்ளது.
புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5-ல் இருந்து 7 ரூபாய் ஆகிறது., அதிகப்பட்ச கட்டணம் 13-ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.