மாநகராட்சி இடத்தை மனைவி பெயரில் வாங்கினாரா? - தஞ்சை திமுக மேயருக்கு எதிராக தடதடக்கும் சர்ச்சை!
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக மனைப் பிரிவுகளாக மாற்றியதாகவும் அதில் ஒரு மனையை மேயர் தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதாகவும் சர்ச்சை வெடித்து விவகாரம் கோர்ட்டுக்கு வந்திருக்கிறது.
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக மனைப் பிரிவுகளாக மாற்றியதாகவும் அதில் ஒரு மனையை மேயர் தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதாகவும் சர்ச்சை வெடித்து விவகாரம் கோர்ட்டுக்கு வந்திருக்கிறது. தஞ்சாவூரில் கடந்த 1973-ல் அருளானந்தம்மாள் நகர் உருவாக்கப்பட்டது. இந்த மனைப்பிரிவு உருவான போது நகராட்சி (அப்போது நகராட்சி) பொதுப் பயன்பாட்டுக்காக சுமார் 45 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், கந்தர்வகோட்டையைச் சேர்ந்த பொன்னாமணி என்பவர் அந்த இடம் தனக்குச் சொந்தம் எனக் கூறி அதனை மனைப்பிரிவுகளாகப் பிரித்து விற்க முயன்றார். ஆனால், நகராட்சி ஆவணங்களில் அது நகராட்சி இடம் என இருந்ததால் மனைப்பிரிவுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பொன்னாமணி பழைய கிரைய பத்திரத்தை வைத்து சிலரின் துணையோடு அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதைவைத்து கடந்த ஆண்டு இந்த மனைப்பிரிவுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது மாநகராட்சி.