மார்க்சியப் பார்வையில் பெண்கள்

காலந்தோறும் பெண்கள் கடந்துவந்த பாதையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பதிவுசெய்திருக்கும் நூல் இது

மார்க்சியப் பார்வையில் பெண்கள்

காலந்தோறும் பெண்கள் கடந்துவந்த பாதையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பதிவுசெய்திருக்கும் நூல் இது. உலகம் முழுவதும் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், தொழிற்புரட்சி, காலனியாதிக்கம் போன்றவை நிலவியபோது, பெண்ணடிமைத்தனமும் உழைப்புச் சுரண்டலும் எப்படியெல்லாம் செயல்படுத்தப்பட்டன, அவற்றிலிருந்து வெளியேற மார்க்சிய அறிஞர்கள் காட்டிய பாதை எவ்வளவு விசாலமானது என்பதை இந்நூல் பேசுகிறது. பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பதில் சோஷலிச இயக்கங்கள் ஆற்றிய பங்கைக் குறிப்பிடுவதோடு, இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களின் முன்னெடுப்பையும் இந்நூல் பதிவுசெய்திருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பெண்களின் வரலாற்றில் தொடங்கிச் சமகாலத்தில் முடித்திருக்கிறார் நூலாசிரியர். வரலாற்றைத் தெரிந்துகொண்டால்தான் சமகாலச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியம் புரியும் என்பதை உணர்த்தியிருக்கும் ஆசிரியர் நர்மதா தேவி, பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறார். - பிருந்தா

பெண் அன்றும் இன்றும்
நர்மதா தேவி
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.520
தொடர்புக்கு:
044-24332924