மிர்ச்சி சிவாவின் ‘சூது கவ்வும் 2’ டிசம்பர் 13-ல் ரிலீஸ்!
மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 11 வருடத்துக்குப் பிறகு இப்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தைத் தயாரித்த சி.வி.குமார் இதையும் தயாரித்திருக்கிறார்.