மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியது: நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியுள்ள நிலையில், நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியது: நடப்பாண்டில் 3-வது முறையாக நிரம்ப வாய்ப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை தாண்டியுள்ள நிலையில், நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்ப வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரைக் கொண்டு சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி 28-ம் தேதி வரை 230 நாட்களுக்கு அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் குறுவை, சம்பா மற்று தாளடி பயிர்களுக்கு 330 டிஎம்சி நீர் தேவைப்படும். அதேபோல், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கொண்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.