மேட்டூர் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழந்தோர் உடலை வாங்க மறுப்பு; உறவினர்கள் போராட்டம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில 840 மெகாவாட் கொண்ட முதல் பிரிவில் 3-வது அலகில் நிலக்கரி சேமிப்பு தொட்டி அருகே 7 ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மாலை பணிபுரிந்தனர். அப்போது, நிலக்கரி சேமிப்பு தொட்டி திடீரென சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் 7 பேரும் நிலக்கரி குவியலில் சிக்கி கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அனல்மின் நிலைய தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு நிலக்கரி குவியலில் சிக்கி படுகாயமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்ரீகாந்த் (24), மனோஜ் குமார்(27), சீனிவாசன் (44), முருகன் (28) கௌதம் (20) மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.