வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: டிச.13 வரை எங்கெல்லாம் கனமழை?
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் 13-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் 13-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, 11-ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.