அம்பேத்கர் மதிப்பை குறைக்கும் வகையில் அமித் ஷா பேசி இருக்கக்கூடாது - கிருஷ்ணசாமி கருத்து
அம்பேத்கர் மதிப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதால் அதுபோன்ற பேச்சை உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர்த்திருக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:“அம்பேத்கர் மதிப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதால் அதுபோன்ற பேச்சை உள்துறை அமைச்சர் அமித் ஷா தவிர்த்திருக்க வேண்டும்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (டிச.19) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “அம்பேத்கர் வாழ்க்கை மிக அர்ப்பணிப்புடனும் அறிவுத்திறனுடனும் இருந்தது. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரையிலும் அவரைப் போல யாரும் இல்லை. நாடாளுமன்ற விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது எந்த தொணியில் எந்த நோக்கத்தில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. இருந்தாலும் அம்பேத்கர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் என கருதினாரா? என்று தெரியவில்லை.