ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்? - திருமாவளவன் விளக்கம்

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவிடம், அரசியல் எதுவும் பேச வேண்டாம். அம்பேத்கர் குறித்தும், நூல் உருவாக்கத்தில் அவருடைய பங்கு குறித்தும் பேசுமாறு, சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தேன். அதைமீறி, அவரது பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்? - திருமாவளவன் விளக்கம்

சென்னை: “நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவிடம், அரசியல் எதுவும் பேச வேண்டாம். அம்பேத்கர் குறித்தும், நூல் உருவாக்கத்தில் அவருடைய பங்கு குறித்தும் பேசுமாறு, சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தேன். அதைமீறி, அவரது பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விசிக-வின் மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் அளவுக்கு அது அமைந்துவிட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் தேவை அமைந்ததன் அடிப்படையில் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆதவ் அர்ஜுனா மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது.” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் இன்று (டிச.9) சந்தித்தார். ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக விசிக சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “ஃபெஞ்சல் புயல் நிவாரணம் வழங்குவதில், வழக்கம்போல மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. 944.80 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு விசிக சார்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினோம்.