இனி ஆண்டுக்கு 2 படங்கள்: ரசிகர்களிடம் சூர்யா உறுதி

சமீபத்தில் திரையரங்கில் வெளியான சூர்யா படங்கள் எதுவுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறவில்லை. ஓடிடியில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் கொரானா காலத்தில் மாபெரும் வரவேற்பினைப் பெற்றன.

இனி ஆண்டுக்கு 2 படங்கள்: ரசிகர்களிடம் சூர்யா உறுதி

இனி ஆண்டுக்கு 2 படங்கள் வெளியாகும் என ரசிகர்களிடம் சூர்யா உறுதியளித்துள்ளார். சமீபத்தில் திரையரங்கில் வெளியான சூர்யா படங்கள் எதுவுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறவில்லை. ஓடிடியில் வெளியான ‘ஜெய் பீம்’ மற்றும் ‘சூரரைப் போற்று’ ஆகிய படங்கள் கொரானா காலத்தில் மாபெரும் வரவேற்பினைப் பெற்றன. இப்போது சூர்யா நடிப்பில் 'சூர்யா 44' மற்றும் 'சூர்யா 45' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

'சூர்யா 45' படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார் சூர்யா. இந்த நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது. சுமார் 300 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டார்கள். அவர்களிடையே பேசும்போது, “இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.