இயற்கையை நேசித்தால் குற்றங்கள் குறையும்: எழுத்தாளர் சோ.தர்மன் கருத்து

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, மனிதர்களை கூர்ந்து கவனித்தாலே சிறந்த படைப்புகளை உருவாக்கலாம். இயற்கையை நேசித்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்று, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்தார்

இயற்கையை நேசித்தால் குற்றங்கள் குறையும்: எழுத்தாளர் சோ.தர்மன் கருத்து

திருநெல்வேலி: நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, மனிதர்களை கூர்ந்து கவனித்தாலே சிறந்த படைப்புகளை உருவாக்கலாம். இயற்கையை நேசித்தால் சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்று, சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரத்திலுள்ள தமிழ் குடிலில் தாமிரபரணி கலை, இலக்கிய மன்றத்தின் 19-ம் இலக்கிய சங்கமம் நடைபெற்றது. ‘கலை, இலக்கியமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு ஓவியரும் சிற்பியுமான சந்ரு தலைமை வகித்தார்.