கண்கவர் அரங்கம்
சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ‘சால்ட்’ பதிப்பகத்தின் அரங்கம் (எண்-60) தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்கல், மரப்பலகை மீது புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதோடு, வண்ணத் திரைகளால் அரங்கின் உட்புறம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ‘சால்ட்’ பதிப்பகத்தின் அரங்கம் (எண்-60) தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செங்கல், மரப்பலகை மீது புத்தகங்கள் வைக்கப்பட்டிருப்பதோடு, வண்ணத் திரைகளால் அரங்கின் உட்புறம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. பழைய டெலிபோன், டைப்ரைட்டர், சங்கு, கருங்கல், மண் கலயங்கள் போன்ற பழைமையும் கலைநயமும் கொண்ட பொருள்களும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சுயமரியாதை இயக்கத்தை அறிய.. ‘நீதிக்கட்சி வரலாறு’ (2 பாகங்கள்), ‘திமுக வரலாறு’ (3 பாகங்கள்) உள்ளிட்ட நூல்களுடன் திராவிட இயக்க வரலாற்று எழுத்தியலுக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிவரும் மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசின் புதிய நூல், ‘சுயமரியாதை இயக்க வரலாறு’. சமத்துவ சமுதாயத்தை லட்சியமாகக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் கட்டமைத்த வரலாற்றை, ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்ட காலம் முதல், 1938ஆம் ஆண்டு முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டது வரையிலான காலகட்டம் வரை சுமார் 600 பக்கங்களுக்கு மேல் இந்த முதல் பாகத்தில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் திருநாவுக்கரசு.