கனவு இல்லம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடி விடுவிப்பு: தமிழக அரசு
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கு ரூ.1747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25 ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3500 கோடிக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை முதற்கட்டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இதுவரை பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.