கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பால பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு
முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலப்பணிகளை ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
நாகர்கோவில்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பால பணிகளை ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை நடைபெற்று வரும் கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற 30ந் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த பால பணியினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடர்ந்து 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.