குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கோரி தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்: 55 பேர் கைது
குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரக்கோரி தஞ்சாவூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பி.ஆர். பாண்டியன் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்: குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரக்கோரி தஞ்சாவூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பி.ஆர். பாண்டியன் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் . விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு சாகும் வரை பஞ்சாப் மாநிலத்தின் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.