கோலடி சர்ச்சை | மாற்று ஏற்பாடுகளை செய்து தராமல் குடியிருப்புகளை அகற்றக்கூடாது: டிடிவி தினகரன்
ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தச்சு தொழிலாளியின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? தச்சு தொழிலாளியின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராடிய பொதுமக்கள் மீது தடியடி நடத்தியிருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை இடிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதில், மனமுடைந்த தச்சுத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.