“நெல்லையில் நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது” - அமைச்சர் ரகுபதி

நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அப்படியொரு சம்பவம் நடந்தபிறகு, அதை தடுக்க கூடிய சக்தி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி தடுக்கும் சக்தி திமுக ஆட்சிக்கு இருக்கிறது. நாங்கள் தடுக்கிறோம், என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.  

“நெல்லையில் நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது” - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: “நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை போன்ற சம்பவங்களை யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அப்படியொரு சம்பவம் நடந்தபிறகு, அதை தடுக்க கூடிய சக்தி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி தடுக்கும் சக்தி திமுக ஆட்சிக்கு இருக்கிறது. நாங்கள் தடுக்கிறோம்,” என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எந்தச் சம்பவத்தையும் நடக்காமல் தடுக்க முடியாது. நெல்லையில், சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்துக்குள் இரு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டார்கள். மொத்தம் 4 குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் காவல் துறை விரைந்து செயல்பட்டு, இரண்டு மணி நேரத்துக்குள் 4 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதற்காக எதிர்க்கட்சிகள் காவல் துறையைப் பாராட்ட வேண்டும். அதைவிடுத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது எந்த வகையில் நியாயம் ஆகும்?