சென்னை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 871 பூங்காக்கள் இன்று திறப்பு
கடந்த நவ. 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சென்னையில் 341 இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
சென்னை: சென்னை மாநகராட்சி பூங்காக்களில் தீவிர தூய்மைப் பணிகள் முடிவடைந்த நிலையில், 871 பூங்காக்களும் இன்று (டிச.3) திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவ. 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சென்னையில் 341 இடங்களில் மழைநீர் தேங்கியது. நேற்று காலை நிலவரப்படி பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டது.
அரும்பாக்கம் பாஞ்சாலியம்மன் கோயில் தெரு, இந்திரா காந்தி தெரு, கோடம்பாக்கம் பட்டேல் தெரு, சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட துரைப்பாக்கம் சாய் நகர் 16-வது தெரு உள்ளிட்ட 7 இடங்களில் மட்டும் மழைநீர் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.