‘டெங்கு’ காய்ச்சல் அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

‘டெங்கு’ காய்ச்சல் அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகம் காணப்படும். இதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டில் சமீப நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணி்க்கை அதிகரித்து வருவதாகவும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.