திமுக ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிப்போரின் சாதி, மதவெறி எண்ணம் நிறைவேறாது: ஸ்டாலின்

தமிழகத்தில் சிலர், ஓரிடத்தில் நிகழ்ந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி திராவிட மாடல் அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைக்கின்றனர் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

திமுக ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சிப்போரின் சாதி, மதவெறி எண்ணம் நிறைவேறாது: ஸ்டாலின்

சென்னை: “தமிழகத்தில் சிலர், ஓரிடத்தில் நிகழ்ந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி திராவிட மாடல் அரசுக்கு கெட்டப் பெயரை உருவாக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, உங்களது சாதி வெறி, மதவெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணிலே, அம்பேத்கர் மண்ணிலே ஒருபோதும் நிறைவேறாது,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று (டிச.6) நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் முதல்வர் பேசுகையில், “இந்த சமூகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எத்தனை செய்தாலும், திமுக அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க களப்பணியில் ஈடுபடுகிற தூய்மைப் பணியாளர்கள்தான். அரசின் பணிகளை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டும்போது நான் மனதுக்குள் தூய்மைப் பணியாளர்களைத் தான் நினைத்துக் கொள்வேன்.