பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்கும் வனத்துறை

தமிழக வனத்துறை சார்பில் ரூ.21 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரமைக்கப்பட உள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்கும் வனத்துறை

சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ரூ.21 கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரமைக்கப்பட உள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நில பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இதில் 190 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டி இனங்கள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நீர், நில வாழ்வன, 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப் பூச்சிகள், 29 வகையான புல் இனங்கள் உள்ளிட்ட 164 வகையான தாவரங்கள் என மொத்தம் 459 வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் கொண்ட சூழல் நிறைந்த பகுதியாக பள்ளிக்கரணை உள்ளது. இந்நிலையில் மீதம் உள்ள பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் ரூ.21 கோடியே 67 லட்சத்தில் சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.