புகழ்பெற்ற தபேலா ‘மேஸ்ட்ரோ’ ஜாகிர் ஹுசைன் கவலைக்கிடம்
இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது. அவர் விரைவில் மீண்டு வர பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற தபேலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் (73) உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளது. அவர் விரைவில் மீண்டு வர பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இதயம் தொடர்பான பிரச்சினை காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜாகிர் ஜாகிர் ஹுசைன் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவருக்கு ஐசியு-வில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.