“யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது” - ‘ஏஐ’ வீடியோ குறித்து நடிகை பிரக்யா நாக்ரா வேதனை
“இது ஒரு கெட்ட கனவு. இதை முழுமையாக இதை மறுக்கிறேன். இதுபோன்ற ’ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பாக இருக்கவும் நான் வேண்டிக்கொள்கிறேன்” என நடிகை பிரக்யா நாக்ரா தெரிவித்துள்ளார்.
சென்னை: “இது ஒரு கெட்ட கனவு. இதை முழுமையாக இதை மறுக்கிறேன். இதுபோன்ற ’ஏஐ’ ஆபாச வீடியோக்களால் மற்ற பெண்கள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பாக இருக்கவும் நான் வேண்டிக்கொள்கிறேன்” என நடிகை பிரக்யா நாக்ரா தெரிவித்துள்ளார்.
‘ஏஐ’ மூலம் உருவாக்கப்பட்ட நடிகை பிரக்யா நாக்ராவின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “இது ஒரு கெட்ட கனவு. முழுமையாக இதை மறுக்கிறேன். தொழில்நுட்பம் நமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவே தவிர, சீரழிப்பதற்கு அல்ல.